புதுச்சேரி அமைச்சரவை ராஜினாமா செய்யப்படாது; காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை இருக்கிறது: முதல்வர் நாராயணசாமி பேட்டி

புதுச்சேரி: புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மை உள்ளது என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த நிலையில், இன்று சபாநாயகர் சிவக்கொழுந்து வீட்டிற்கு சென்ற ஜான்குமார் ராஜினாமா கடிதம் அளித்தார். 4 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளதால் தற்போதைய நாராயணசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து அமைச்சர் கந்தசாமி புதுச்சேரி ஆளுங்கட்சி அமைச்சரவை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியது.

பரபரப்பான அரசியல் சூழலில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்; புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான எனது அரசுக்கு பெரும்பான்மை உள்ளது. இந்திய அரசியல் சாசனப்படி புதுச்சேரி அரசு செயல்படும். புதுச்சேரி அமைச்சரவை ராஜினாமா என்ற பேச்சுக்கே இடமில்லை; பேரவையில் பெரும்பான்மை நிரூபிப்போம் என கூறினார்.

Related Stories: