துப்புரவு தொழிலாளி உடலை வாங்க மறுத்து 4-வது நாளாக போராட்டம்.: போலீசார் தாக்கியதால் தான் தற்கொலை என உறவினர்கள் புகார்

மதுரை: மதுரையில் தற்கொலை செய்து கொண்ட துப்புரவு தொழிலாளி உடலை வாங்க மறுத்து 4-வது நாளாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரையில் உள்ள பொறியாளர் வீட்டில் கடந்த வாரம் 150 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக சுப்ரமணிய புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த வழக்கில் திருப்பரங்குன்றத்தை சேர்ந்த கண்ணன் என்ற துப்புரவு பணியாளரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி உள்ளனர். இரண்டு நாட்களுக்கு மேல் விசாரணையை நடத்திய போலீசார், பிறகு அவரை வீட்டுக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

வீட்டிற்கு சென்ற கண்ணன் கடந்த வெள்ளி கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். துப்புரவு பணியாளர் கண்ணன் தற்கொலைக்கு போலீசார் காவல் நிலையத்தில் வைத்து தாக்கியதே காரணம் என்று அவரது மனைவி மற்றும் மகன் குற்றம் சாட்டினார்.

இந்தநிலையில் பிரேத பரிசோதனை முடிந்து நன்கு நாட்கள் ஆகியும் அவரது உடலை வாங்க மறுத்து மதுரை அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் சுப்ரமணிய புரம் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்த கண்ணன் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

Related Stories: