சாதி ரீதியான கருத்து: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மீது வழக்குப் பதிவு..! ஹரியானா காவல்துறை நடவடிக்கை

டெல்லி: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பந்து வீச்சாளர் யுவேந்திர சாஹல் குறித்து சாதிரீதியாக பேசியதாகக் கூறி ஹரியானா காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளனர். கடந்த ஆண்டு ஜூன் மாதம், ரோகித் சர்மாவுடன் இணைந்து யுவராஜ் சிங் இன்ஸ்டாகிராமில் உரையாடும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது பேசிய யுவராஜ் சிங், இந்திய அணியின் யுஸ்வேந்திர சஹால் வெளியிட்ட டிக் டாக் வீடியோ குறித்து கிண்டலாகப் பேசினார்.

அப்போது, சாஹல் சார்ந்திருக்கும் சாதி குறித்து யுவராஜ் சிங் விமர்சித்துள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து, அரியாணா மாநிலம் ஹிசார் மாவட்டத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டசமூகத்தைச் சேர்ந்த ஆர்வலரும், வழக்கறிஞருமான ராஜத் கல்சான் என்பவர் நேற்று ஹிசார் நகர போலீஸிடம் யுவராஜ் சிங் மீது புகார் அளித்தார். இந்த புகார் அளித்து  8 மாதங்கள் ஆன நிலையில் தற்போது,  யுவராஜ் சிங்கிற்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.  முன்னதாக யுவராஜ் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றையும் பதிவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: