கொன்னைப்பட்டி வட்டக்கிடங்கில் இருந்து ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் விநியோகம் செய்ய வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே பயன்பாடின்றி உள்ள வட்டக்கிடங்கில் இருந்து ரேஷன் கடைகளுக்கு பொருட்களை விநியோகம் செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொன்னமராவதி தாலுகா வெங்கிளமேடு கொன்னைப்பட்டி ஊராட்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் வட்டக்கிடங்கு உள்ளது. இந்த கட்டிடம் பயன்பாடின்றி உள்ளதால் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டு எடுத்து செல்லப்படுகிறது. இதன்மூலம் ரேஷன் கடைகளுக்கு தேவையான அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் இப்பகுதியில் உள்ள ரேஷன் கடைகளுக்கு கொள்முதல் செய்தால் இரவு நேரங்களில் ரேஷன் கடைகளில் பொருட்கள் இறக்குவதை தவிர்க்கலாம்.

மேலும் பள்ளி மற்றும் அங்கன்வாடிகளுக்கும் இதன்மூலம் தேவையான சத்துணவு பொருட்களையும் இறக்கி வைக்கலாம். எனவே பொன்னமராவதி தாலுகாவில் உள்ள வட்டக்கிடங்கு மூலம் ரே‌ஷன் பொருட்கள், பள்ளி, அங்கன்வாடிகளுக்கு தேவையான சத்துணவு பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென ரேஷன்கடை ஊழியர்கள், அங்கன்வாடி, சத்துணவு மைய ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: