ஜப்பானில் பயங்கர பூகம்பம் அணு நிலையங்களில் சேதம்?

டோக்கியோ: ஜப்பானில் அணு நிலையங்கள் நிறைந்துள்ள புகுஷிமாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பூகம்பத்தின் மையப்பகுதி, புகுஷிமாவில் இருந்து 60 மைல் தொலைவில் உள்ள கடலோர நகரமான நமிக்கு அடியில் உள்ளது. இது, ரிக்டேர் அளவுகோலில் 7.1 புள்ளிகளாக பதிவாகி உள்ளது. இருப்பினும், சுனாமி ஆபத்து எதுவும் ஏற்படவில்லை. இதன் அதிர்வு டோக்கியோ உள்ளிட்ட நகரங்களிலும் உணரப்பட்டது. கட்டிடங்கள் குலுங்கின. இருப்பினும், இந்த பூகம்பத்தால் அங்காங்கு ஒரு சில கட்டிடங்கள் மட்டுமே இடிந்துள்ளன. புகுஷிமோவில் உள்ள அணு நிலையங்களில் சேதம் ஏற்பட்டுள்ளதா என ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories: