குளித்தலை தேவதானம் பள்ளி பின்புறம் குடிநீர் தொட்டியை சுற்றி மண்டிகிடக்கும் செடி,கொடிகள்

குளித்தலை : கரூர் மாவட்டம் குளித்தலை தேவதானத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இதில் குறைந்த அளவே மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனோ காலம் என்பதால் கடந்த 10 மாதங்களாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டிருந்தது. தற்போது அரசு அறிவித்த உத்தரவுப்படி ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து சென்று கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் பள்ளிக் கட்டிடத்தின் பின்புறம் ரயில்வே கரையோரம் செடி கொடிகள் முளைத்து காடுபோல் காட்சியளிக்கிறது.

இதனால் அப்பகுதியில் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அப்பகுதி மக்கள் முழுவதும் பயன்படுத்தும் மினி குடிநீர் தொட்டி ஒன்று உள்ளது. இதில் தினந்தோறும் அப்பகுதியில் வசிக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது. அதனால் சுகாதார ஆய்வாளர் பள்ளியின் பின்புறம் மற்றும் மினி தண்ணீர் டேங்க் அருகில் காடுபோல் அடர்ந்துள்ள செடி கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: