ஊட்டி - தேனாடுகம்பை சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் விபத்து அபாயம்

ஊட்டி : ஊட்டியில் இருந்து பாரஸ்ட்கேட் வழியாக தேனாடுகம்பை, அணிக்கொரை மற்றும் எப்பநாடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் முக்கிய சாலையாக உள்ளது.இச்சாலையில், பாரஸ்ட்கேட் முதல் ஆடாசோலை செல்லும் சாலை அங்காங்கே பழுதடைந்துள்ளது.

இதுமட்டுமின்றி, இ்ந்த சாலையில் பெரும்பாலான இடங்களில் சாலையோரங்களில் மழை நீர் ஓடி, சாலை மிகவும் பழுதடைந்து பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது.

இவ்வழித்தடத்தில் கனரக வாகனங்கள் எதிர எதிரே சென்றால் இடம் விட முடியாத நிைல ஏற்படுகிறது.சில சமயங்களில் இந்த பள்ளங்களில் இறங்கி சாய்ந்து விடுகின்றன. மேலும், இரவு நேரங்களில் இச்சாலையோரங்களில் பள்ளங்கள் உள்ளது தெரியாமல் ஏராளமான வாகனங்கள் பள்ளத்தில் இறங்கி சாய்ந்து விபத்துக்குள்ளாகின்றன.

குறிப்பாக, இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் இப்பள்ளங்களில் விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே, நெடுஞ்சாலைத்துறையினர் இச்சாலைேயாரங்களில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை மூடி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: