டிராக்டர் பேரணி வன்முறை விவகாரம்: சசிதரூரை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை

புதுடெல்லி: டெல்லியில் குடியரசுத் தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. அதில், விவசாயி ஒருவர் டிராக்டர் கவிழ்ந்து உயிரிழந்தார். ஆனால், போலீசார் சுட்டதில் தான் அவர் உயிரிழந்ததாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சசிதரூர், பத்திரிக்கையாளர் ராஜ்தீப் சர்தேசாய், ஆனந்த் நாத் உள்ளிட்டோர் டிவிட்டரில் பதிவு செய்தனர். இதையடுத்து தவறான செய்தியை வெளியிட்ட எம்.பி., சசிதரூர் உள்ளிட்டோர் மீது தேச துரோகம், சதி செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த  வழக்குகளை ரத்து செய்யும்படி சசிதரூர் உட்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவருமு் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 3ம் தேதி வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘சசிதரூர் உட்பட குற்றம் சாடப்பட்ட அனைவரையும் கைது செய்ய இடைக்கால தடை விதிக்கப்படுகிறது,’ என கூறி, வழக்கை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

Related Stories: