ராணுவ மையத்தில் பயிற்சி: கொரோனா நோயாளிகளை கண்டுபிடிக்கும் சிப்பிபாறை

புதுடெல்லி: தமிழகத்தை சேர்ந்த நாய் வகையான சிப்பிபாறை கொரோனா நோயாளிகளை கண்டுபிடிக்கும் திறனை பெற்றுள்ளது. தமிழகத்தை சேர்ந்த நாய் வகைகளில் மிகவும் சிறந்தது சிப்பிபாறை. வேட்டை நாய் வகையை சேர்ந்த இது, ராணுவத்தில் பயன்படுத்தப்படுகிறது. கொரோனா பாதித்த நோயாளிகளை கண்டறிவதற்காக இங்கிலாந்து, ரஷ்யா உள்ளிட்ட வெளிநாடுகளின் விமான நிலையங்களில் மோப்ப நாய்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதேபோல், இந்தியாவில் இதை கண்டறிய சண்டிகரில் உள்ள ராணுவ மையத்தில் 8 நாய்களுக்கு பல மாதமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அவற்றில் ஜெயா என்கிற சிப்பிபாறையும், கேஸ்பர் என்ற பெயரை கொண்ட காக்கர் ஸ்பேனியஸ் வகை நாயும், கொரோனா நோயாளிகளை கண்டறிவதில் தேர்ச்சி பெற்றுள்ளன.

இந்த நாய்கள் இதுவரையில் 3,800 பேரின் சிறுநீர், வியர்வை மாதிரிகளை மோப்பம் பிடித்து, 22 நோயாளிகளை கண்டறிந்துள்ளன. விரைவில் இந்த மையத்தில் மேலும் ஒரு சிப்பிபாறை உட்பட 2 நாய்களுக்கு கொரோனா நோயாளிகளை கண்டறியும் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக, இந்த மையத்தின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Related Stories: