பெண்களிடையே அதிக விழிப்புணர்வு: தடுப்பூசி போட்டு கொள்வதிலும் பெண்கள் முதலிடம்...சுகாதாரத்துறை தகவல்.!!!

புதுடெல்லி: நாடு முழுவதும் முன்னுரிமை பெற்ற தடுப்பூசி போட்டுக் கொள்வோரில் பெண்களே ஆர்வமாக உள்ளதால், அவர்கள் 63 சதவீதத்துடன் முதலிடம் பெற்றுள்ளனர். அமெரிக்கா, இங்கிலாந்தைத் தொடர்ந்து இந்தியாவில் அதிகளவில்  தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 12 மாநிலங்களில் தலா இரண்டு லட்சத்திற்கும் அதிகமான சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில், நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் 1,66,408 பேருக்கும், புதுச்சேரியில் 3,532  பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதுவரை 57.75 லட்சத்திற்கும் அதிகமான (57,75,322) பயனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவர்களில், 53,04,546 சுகாதார பணியாளர்களும், 4,70,776 முன்கள ஊழியர்களும் ஆவர். கடந்த 24 மணி நேரத்தில் 8,875 முகாம்களில்  3,58,473 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1.48 லட்சமாகக் (1,48,766) குறைந்துள்ளது.

இது மொத்த பாதிப்பில் வெறும் 1.37 சதவீதமாகும். கொரோனா தொற்று பெரும்பாலும் ஆண்களில் காணப்படுகிறது. ஆனால் நோயைத் தடுக்க பெண்களிடையே அதிக விழிப்புணர்வு உள்ளது. பெண்கள் கொரோனா தடுப்பூசியையும்  வென்றுள்ளனர். இதுவரை, நாட்டில் 5.5 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது, அவர்களில் 63 சதவீதம் பேர் மிக அதிகபட்சமாக பெண் சுகாதார ஊழியர்கள் அல்லது முன்னணி தொழிலாளர்கள் தடுப்பூசி  போட்டுள்ளனர்.

Related Stories: