எச்1 பி விசா பதிவு மார்ச் 9-ம் தேதி தொடங்கும்.: குலுக்கல் முறையில் தகுதியானவர்கள் தேர்வு...இந்திய ஐ.டி. பணியாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி

நியூயார்க்: அமெரிக்காவில் 2022-ம் ஆண்டு எச்1 பி விசா-களுக்கான பதிவுகள் அடுத்த மாதம் 9-ம் தேதி முதல் தொடங்கும் என்று அமெரிக்க குடியேற்றத்துறை தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் வெளிநாட்டினர் தங்கி பணிபுரிய ஆண்டுக்கு 85 ஆயிரம் எச்1 பி விசாக்கள் வழங்கப்படுகிறது. இதற்க்கு 2.25 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் விண்ணப்பரித்துள்ளனர்.

தகுதிக்கு ஏற்ப மதிப்பெண் அடிப்படையில் விசா வழங்குவதற்கான முன்னாள் அதிபர் டிரம்பின் உத்தரவு தாமதக்கப்படும் என்று தற்போது உள்ள அதிபர் ஜோ பைடன் அறிவித்து இருப்பதால்,  டிசம்பர் 31-ம் தேதி வரை குலுக்கல் முறையே தொடரும் என ஜோ பைடன் நிறுவானம் தெரிவித்துள்ளது.

இந்த உத்தரவால் இந்திய தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக எச்1 பி விசா விண்ணப்பத்திற்கான பதிவுகள் வருகின்ற மார்ச் 9-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெறும் என்று அமெரிக்க குடியேற்றத்துறை  தெரிவித்துள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரங்கள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: