விவசாயிகள் போராட்டம் தொடர்பாக தவறான தகவல்.: காலிஸ்தான் ஆதரவு டிவிட்டர் கணக்குகளை முடக்க பரிந்துரை

டெல்லி: விவசாயிகள் போராட்டம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்பி வரும் பாகிஸ்தான் மற்றும் காலிஸ்தான் ஆதரவாளர்களின் கணக்குகளை நீக்கும் படி டுவிட்டர் நிறுவனத்திடம் மத்திய அரசு தெரிவித்துள்ளது. டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் குடுத்து வருகின்றனர்.

சமூக வலைத்தளங்கள் மூலம் பிரபலங்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் தங்களுது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக தொடர்ந்து தவறான தகவல்கள் டுவிட்டரில் பரப்பப்பட்டு வருவதக மத்திய அரசு குற்றம்ச்சாட்டி வருகிறது. வெறுப்புணர்வை தூண்டும் வகையில் விவசாயிகள் இன அழிப்பு என்ற ஹாஷ்டேக்கை பரப்பியதாக ஏற்கனவே 250 டுவிட்டர் கணக்குகளை முடக்க மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.

தற்போது விவசாயிகள் தொடர்பாக பாகிஸ்தான் மற்றும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் தவறான தகவல்களை பரப்பி வருவதாக மத்திய அரசு கூறிவருகிறது. இது தொடர்பாக 1,178 டுவிட்டர் கணக்குகளை முடக்க மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: