கோவா: 11 அணிகள் பங்கேற்றுள்ள 7வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 84வது லீக் ஆட்டத்தில் ஒடிசா எப்.சி.-கொல்கத்தா அணிகள் மோதின. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய கொல்கத்தா, அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தியது. அந்த அணியின் மன்விர் சிங் 11வது மற்றும் 54வது நிமிடத்திலும், ராய் கிருஷ்ணா 83, 86வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.