காஞ்சிபுரம் ஜோஸ் ஆலுக்காஸில் உலகத்தர நகை கண்காட்சி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் உலகத்தர நகைகளின் கண்காட்சியை வாடிக்கையாளரே தொடங்கி வைக்கும் தொடக்க விழா நடந்தது. ஜோஸ் ஆலுக்காஸ் காஞ்சிபுரம் கிளை மேலாளர் தேவராஜ் தலைமை தாங்கினார். துணை மேலாளர் பிரவீன் வரவேற்றார். கடந்த 3ம் தேதி தொடங்கிய இந்த கண்காட்சி வரும் 15ம் தேதிவரை நடைபெற உள்ளது. இந்தக் கண்காட்சியில் சிறப்புச் சலுகையாக ஆண்டிக், பிரைடல், டெம்பிள் ஜூவல்லரியின் சேதாரத்தில் 30 சதவீதம் தள்ளுபடியும், வைரத்தின் மதிப்பில் 25 சதவீதம் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. மேலும் ₹1 லட்சம் மதிப்பில் நகைகள் வாங்கும்போது வெள்ளி நாணயம் பரிசாக வழங்கப்படுகிறது.  இந்த தொடக்க விழா நிகழ்ச்சியில் அலுவலக மேலாளர் ஹரி நாராயணன் மற்றும் ஏராளமான வாடிக்கையாளர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: