பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஆளுநரின் நடவடிக்கை அரசியல் அமைப்புக்கு எதிரானது!: திருமாவளவன்

டெல்லி: பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுநரின் நடவடிக்கை அரசியலமைப்புக்கு எதிரானது என திருமாவளவன் தெரிவித்துள்ளார். டெல்லியில் விசிக தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் குடியரசுத் தலைவருக்கே அதிகாரம் என ஆளுநர் தெரிவித்துள்ளார். 28 மாதங்களாக காலம் தாழ்த்தி ஆளுநர் முடிவு எடுத்திருப்பது அதிகாரத்தை தட்டிக்கழிப்பதாக உள்ளது. தமிழக ஆளுநரை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என தெரிவித்தார்.

Related Stories: