முத்துமாரியம்மன் கோயிலில் அடிப்படை வசதிகள்

திருமயம்,மார்ச் 14: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள இளஞ்சாவூர் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா இன்று (14ம்தேதி) இரவு பூச்சொரிதல் விழாவுடன் தொடங்குகிறது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொள்ளும் நிலையில் பக்தர்களுக்கு தேவையான வசதி ஏற்படுத்த ஊராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பக்தர்கள் அதிகம் பயன்படுத்தும் திருமயத்தில் இருந்து பைரவர் கோயில், பிடாரியம்மன் கோயில், அடைக்கலம் காத்தா கோயில், ரயில்வே பாதை வழியாகச் செல்லும் சாலை கிராவல் மண் நிரப்பி சாலை சரி செய்யப்பட்டது. மேலும் அப்பகுதியில் உள்ள குடிநீர் டேங்குகள், தெருவிளக்குகள் சரி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து முத்துமாரியம்மன் கோயில் வளாகம் முழுவதும் உள்ள புதர் செடிகள், புற்கள் அகற்றப்பட்டு கோயில் வளாகம் தூய்மையாக பராமரிக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தர் தெரிவித்தார். இதனிடையே இளஞ்சாவூர் முத்துமாரியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வசதி ஏற்படுத்தி கொடுத்த திருமயம் ஊராட்சி நிர்வாகத்திற்கு அப்பகுதி சேர்ந்த பக்தர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்….

The post முத்துமாரியம்மன் கோயிலில் அடிப்படை வசதிகள் appeared first on Dinakaran.

Related Stories: