மாணவர்கள் கடைபிடிக்க வேண்டியவைகள் என்ன? கல்வித்துறை அதிகாரிகள் தகவல் பிளஸ்2, பிளஸ்1 பொதுத்தேர்வு எழுதும்மாணவர்கள் கடைபிடிக்க வேண்டியவைகள் என்ன? கல்வித்துறை அதிகாரிகள் தகவல் பிளஸ்2, பிளஸ்1 பொதுத்தேர்வு எழுதும்

வேலூர்: பிளஸ்2, பிளஸ்1 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன? கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் இன்று பிளஸ்2 பொதுத்தேர்வு தொடங்குகிறது. வேலூர் மாவட்டத்தில் பிளஸ்2 தேர்வை 16 ஆயிரத்து 970 மாணவர்களும், நாளை தொடங்கும் பிளஸ்1 தேர்வை மொத்தம் 13 ஆயிரத்து 892 மாணவர்கள் எழுத உள்ளனர். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து வேலூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: மாணவ, மாணவிகள் மற்றும் தனி தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மாணவர்களின் விவரங்கள் மற்றும் தேர்வு தொடர்பான விவரங்களோடு தேர்வு மையங்களில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய அறிவுரைகள் இடம் பெற்றுள்ளன. அதன்படி தேர்வு மையங்களில் தேர்வறைக்கு செல்லும் மாணவர்கள், கண்காணிப்பாளரிடம் ஹால் டிக்கெட் காண்பித்தால் மட்டுமே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவர். மொபைல் போன் உள்ளிட்ட எந்த தகவல் தொடர்பு சாதனங்களையும் தேர்வு மையம் மற்றும் தேர்வு அறைக்குள் எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது.விடைத்தாள்களில் எக்காரணம் கொண்டும் ஸ்கெட்ச் பேனா, கலர் பென்சில் ஆகியவற்றை பயன்படுத்தக்கூடாது. மேலும் விடைத்தாள் புத்தகத்தில் உள்ள பக்கங்களை எக்காரணங்களை கொண்டும் கிழிக்கவோ அல்லது தனியாக பிரித்து எடுத்தும் செல்லக்கூடாது. தேர்வர்கள் துண்டு சீட்டு வைத்திருத்தல், மற்ற தேர்வர்களை பார்த்து எழுதுதல், விடைத்தாள்களை பரிமாறிக்கொள்ளுதல், ஆள்மாறாட்டம் செய்தல் மற்றும் விடைத்தாளில் எழுதிய எல்லா விடைகளையும் தாமே கோடிட்டு அடித்தல் போன்ற நிகழ்வுகள் ஒழுங்கீன செயல்களாக கருதப்படுகின்றன. அதற்குரிய தண்டனைகள் வழங்கப்படும். ஆகையால் தேர்வாளர்கள் தவறான செயல்களில் ஈடுபட வேண்டாம் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.பாக்ஸ்…புகார் எண்கள் அறிவிப்பு பொதுத்தேர்வு தொடர்பான புகார் கொடுக்க தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. பிளஸ்2 மற்றும் பிளஸ்1 பொதுத்தேர்வு தொடர்பாக மாணவர்கள் பெற்றோர்கள் பொதுமக்கள் தங்கள் புகார்கள் மற்றும் கருத்துக்களை தெரிவிக்கும் வகையில் அரசு தேர்வு துறை இயக்கத்தின் முழு நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறையை 9498383081 மற்றும் 9498383075 ஆகிய செல்போன் எங்கள் மூலமாக தேர்வு காலங்களில் ஒவ்வொரு நாளும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என அரசு தேர்வு துறை தெரிவித்துள்ளது….

The post மாணவர்கள் கடைபிடிக்க வேண்டியவைகள் என்ன? கல்வித்துறை அதிகாரிகள் தகவல் பிளஸ்2, பிளஸ்1 பொதுத்தேர்வு எழுதும்மாணவர்கள் கடைபிடிக்க வேண்டியவைகள் என்ன? கல்வித்துறை அதிகாரிகள் தகவல் பிளஸ்2, பிளஸ்1 பொதுத்தேர்வு எழுதும் appeared first on Dinakaran.

Related Stories: