மேல்மலையனூருக்கு இன்று 100 சிறப்பு பஸ்கள் இயக்கம் வைகாசி அமாவாசை ஊஞ்சல் சேவை

வேலூர், ஜூன் 6: வைகாசி அமாவாசை ஊஞ்சல் சேவையை முன்னிட்டு மேல்மலையனுக்கு அரசு போக்குவரத்துக்கழகம் வேலூர் மண்டலம் சார்பில் 100 பஸ்கள் இன்று இயக்கப்படுகிறது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஒவ்வொரு அமாவாசையன்றும் ஊஞ்சல் சேவை நடத்தப்படுகிறது. இந்த சேவையை காணவும், அங்காளபரமேஸ்வரி அம்மனை தரிசனம் செய்யவும் உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கில் பக்தர்கள் மேல்மலையனூர் வருகின்றனர். இன்று மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் வைகாசி அமாவாசை ஊஞ்சல் சேவை இரவு நடக்கிறது. இதை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் வேலூர் மண்டலம் சார்பில் வேலூரில் இருந்து 50 பஸ்களும், ஆற்காட்டில் இருந்து 20 பஸ்களும், திருப்பத்தூரில் இருந்து 30 பஸ்களும் மேல்மலையனூருக்கு இயக்கப்படுகிறது என்று அரசு போக்குவரத்துக்கழகம் வேலூர் மண்டல அலுவலகம் அறிவித்துள்ளது.

The post மேல்மலையனூருக்கு இன்று 100 சிறப்பு பஸ்கள் இயக்கம் வைகாசி அமாவாசை ஊஞ்சல் சேவை appeared first on Dinakaran.

Related Stories: