விவசாயிகள் போராட்டத்துக்கு உலக அளவில் ஆதரவு கூடிவருவதால் மூத்த அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை

டெல்லி: டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நீடிக்கும் நிலையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டுள்ளார். குடியரசு நாளன்று நடைபெற்ற டிராக்டர் பேரணியில் வன்முறை ஏற்பட்டதைத் தொடர்ந்து, விவசாயிகள் மீண்டும் 6-ம் தேதி தேசிய, மாநில நெடுஞ்சாலை மறியல் போராட்டத்தை நடத்த உள்ளதா அறிவித்துள்ளனர்.  

இதனால் டெல்லி எல்லைகளுக்கு விவசாயிகள் அதிக அளவில் வருவதை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே சிங்கு, திக்ரி, காசிப்பூர் உள்ளிட்ட எல்லைகளில் போலீசார் தடுப்புகளை அமைத்துள்ளனர். இந்த நிலையில் தற்போது டெல்லிக்கு செல்லும் ஹரேவாலி, மங்கேஸ்புர், ஜரோடா, தன்சா, ஆகிய கூடுதல் வழிகளையும் போலிசார் முடிக்கியுள்ளனர். இந்த செயலால் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக உலக அளவில் பரவிவருகிறது.

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக உலக அளவில் பரவிவருவதால் தற்போது டெல்லி காவல் ஆணையர், புலனாய்வுத்துறை, ரா பிரிவு அதிகாரிகள் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த கூட்டத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தநிலையில் நேற்று விவசாயிகள் போராட்டம் குறித்து பிரதமர் மோடி மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினர். அந்த ஆலோசனை கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உள்ளிட்டோர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories: