இலங்கை அரசின் நில அபகரிப்பு, கலாச்சார அழிப்புக்கு கண்டனம்: உரிமைக்காக 500 கி.மீ. தூரம் பேரணி நடத்தும் தமிழர்கள்

கொழும்பு: இலங்கையில் தமிழர்களின் பூர்விக நிலங்களை ஆக்கிரமிப்பது மற்றும் கலாச்சார அடையாளங்களை அளிக்கும் பவுத்தமயமாக்களுக்கு எதிராக 500 கி.மீ. தூரம் பேரணியை சமூக அமைப்புகள் நடத்தி வருகின்றன. நேற்று தொடங்கிய பேரணியில் கலந்துகொண்டவர்கள் தமிழர் பகுதிகளில் நிலங்களை அபகரித்து தொடரும் ராணுவமயமாக்கல் இஸ்லாமியர்களின் வழிபாட்டு கூடங்கள் எரிக்கப்படுவது உள்ளிட்டவற்றுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

அனைத்து தமிழ் கட்சிகளும் இஸ்லாமிய அமைப்புகளும் பேரணிக்கு ஆதரவு அளித்துள்ளனர். கொட்டும் மழையும் பொருட்படுத்தாமல் பலர் கலந்துகொண்ட இப்பேரணி, காவல்துறையினரின் தடையையும் மீறி நடைபெற்றது. சில இடங்களில் பேரணிக்கு வந்தவர்களை தடுத்த ராணுவத்தினர் துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு நீதி வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் பேரணியில் வலியுறுத்தப்பட்டன.

குறுந்தூர்மலை அய்யனார் கோவில், வெடுக்குநாறி சிவன் கோவில் அமைந்துள்ள இடங்களில் வேறு தொல்லியல் சான்றுகள் உள்ளதாக கூறி பவுத்த ஆலையங்களை நிறுவி தமிழர்களின் வழிபாட்டு உரிமையை பறிக்க முயற்சி நடப்பதாக பேரணியில் குற்றம் சாட்டப்பட்டது. 500 கி.மீ. தூர பேரணி முல்லைத்தீவு, மன்னார், கிளி நொச்சி, பரந்தன், யாழ்ப்பாணம் வழியாக பொலிகண்டியை ஒரு வாரத்தில் சென்றடைய உள்ளது.

Related Stories: