இப்படிலாம் வாக்குறுதிகள் கொடுக்க முடியுமா? நாகை வாக்காளர்களை அலறவிடும் சிவசேனா தேர்தல் அறிக்கை போஸ்டர்

நாகை: நாகை மாவட்டம் முழுவதும் சிவசேனா கட்சியின் 2021 வரைவு தேர்தல் அறிக்கை என்ற போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இதை பார்த்த, மக்கள், ஆளும் கட்சியினர் மற்றும் தேசிய கட்சியினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக முக்கிய கட்சிகள் முதல் லெட்டர் பேடு கட்சிகள் வரை தங்களது தேர்தல் பணிகளில் பம்பரமாக சுழன்று வேலை செய்து வருகிறது. தேர்தலில் மக்களை கவர தேர்தல் அறிக்கை கதாநாயகனான திகழும். அதனால், தேர்தல் அறிக்கையில் வரும் ஒவ்வொரு வாக்குறுதி சிந்தித்து, யோசித்துதான் முக்கிய கட்சிகள் வெளியிடும்.

ஆனால், மகராஷ்டிராவை ஆளும் சிவசேனா கட்சி சார்பில் தமிழக சட்டமன்ற 2021 வரைவு தேர்தேல் அறிக்கை என்று நாகை மாவட்டம் முழுவதும் ஒட்டுப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதைபார்த்த பொதுமக்கள், ஆளும் மற்றும் தேசிய கட்சியினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். சிவசேனா சார்பில் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் சுந்தரவடிவேல் நாகை தொகுதியில் போட்டியிட தலைமைக்கு விருப்பம் தெரிவித்து அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதிதான் வரைவு தேர்தல் அறிக்கை போஸ்டர்.

அந்த போஸ்டரில் கூறியிருப்பதாவது: திருச்சி, மதுரை, கோயம்புதூர் தமிழக தலைநகரங்களாக ஆக்கப்படும். திருவள்ளூவர் சிலை, ராஜராஜ சோழன் சிலை ஒவ்வொரு மாவட்ட தலைநகரத்திலும் நிறுவப்படும். இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பத்தாம் வகுப்பு முதல் உயர் கல்வி வரை வழங்கப்படும். முருகனின் ஆறுபடை வீடுகள், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில், மேல்மருவத்தூர் மாரியம்மன்கோயில், சபரிமலை ஐயப்பன்கோயில் ஆகிய திருத்தலங்களுக்கு விரதம் இருந்து செல்லும் பக்தர்களுக்கு இலவச பஸ்பாஸ் வழங்கப்படும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் விவசாய கல்லுாரி, சாதிவாரி மக்கள் தொகைக்கேற்ப அமைச்சரவையில் பிரதிநிதித்துவம், பூரணமதுவிலக்கு, காவல்துறையை முற்றிலும் நவீன மயமாக்கி புதிதாக 2 லட்சம் பேர் காவலர்கள் பதவிக்கு உருவாக்கப்பட்டு காவலர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும். வருடத்திற்கு 20 நாட்கள் சுற்றுலா செல்ல விடுமுறை, முதல்வர் பதவி இரண்டரை ஆண்டு ஆணுக்கும், இரண்டரை ஆண்டு பெண்ணுக்கும் வழங்கப்படும் உள்பட 27 வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளது.

இந்த போஸ்டர்களை பார்த்த வாகனங்களில் செல்லக்கூடிய வாக்காளர்கள், ஆளும் கட்சியினர் வாயடைத்து போயி உள்ளனர். சிவசேனா என்ற கட்சி இருக்கிறதா என்ற கேள்வி எழுப்பும் நிலையில், இப்படி வாய்க்கு வந்த வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு போறது வியப்பாக உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: