லால்பாக் பூங்காவில் நுழைவு கட்டணம் அதிகரிப்பு

பெங்களூரு: பெங்களூருவில் சிறப்பு மிக்க லால்பாக் தாவிரவியல் பூங்காவில் பார்க்கிங் மற்றும் நுழைவுக் கட்டணத்தை தோட்டக்கலைத்துறை அதிகரித்துள்ளது.   பெங்களூருவில் அமைந்துள்ள லால்பாக் தாவிரவியல் பூங்கா வரலாற்று சிறப்பு  மிக்கது. ஆண்டு தோறும் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தை முன்னிட்டு இங்கு மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். கண்காட்சியில் இடம் பெறும் அழகிய செடி மற்றும் பூக்களை காண லட்சக்கணக்காண மக்கள் கூட்டம்  அலைமோதும். இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக குடியரசு தின மலர்கண்காட்சி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வேறுறொரு நாளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   இந்நிலையில் தற்போது பூங்காவின் நுழைவு மற்றும்  பார்க்கிங் கட்டணத்தை தோட்டக்கலைத்துறை அதிகரித்துள்ளது.   

இதுகுறித்து தோட்டக்கலை துணை இயக்குனர் ஜி.குசுமா கூறியதாவது, நாடு முழுவதும் உள்ள பல பூங்காக்கள் நுழைவு கட்டணமாக 50 வசூலிக்கின்றன. ஆனால் நாங்கள் ₹5 மட்டுமே உயர்த்தியுள்ளோம். ஆறு முதல் 12 வயதுக்குட்பட்ட  குழந்தைகளுக்கு ₹10 மற்றும் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 30 வசூலிக்கப்படும்.  இதேபோல் பார்க்கிங் கட்டணமும் 5  உயர்த்தப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் முதல் மூன்று மணிநேரங்களுக்கு தற்போதுள்ள கட்டணங்களை விட ₹5  கூடுதலாக செலுத்த வேண்டும். பின்னர் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பார்க்கிங் கட்டணம் 5 முதல் 25 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்றார்.

Related Stories: