கத்தார் உலக கோப்பை கால்பந்தாட்டத்துக்கு ஸ்டேடியம் முழுவதும் ரசிகர்கள் அனுமதி!: ஃபிபா தலைவர் அறிவிப்பு

கத்தார்: கத்தாரில் நடைபெறும் உலக உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டியை காண ரசிகர்களை முழு அளவில் அனுமதிக்கப்படுவார்கள் என சர்வதேச கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது. கொரோனா என்ற உயிர்கொல்லி நோய் பரவல் காரணமாக கடந்த மார்ச்சில் இருந்து உலகம் முழுவதும் விளையாட்டு போட்டிகள் நடைபெறவில்லை. இதனை தொடர்ந்து தொற்று பரவல் குறைந்ததால் கடந்த ஜூலை மாதம் முதல் ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் பங்கேற்கும் வீரர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் ரசிகர்கள் மட்டுமின்றி வீரர்களிடமும் ஆர்வம் இல்லாத சூழலே காணப்பட்டது.

இந்நிலையில் கத்தார் நாட்டில் அடுத்தாண்டு நடைபெறும் உலக கோப்பை கால்பந்தாட்டத்தின் போது ஸ்டேடியம் முழுவதும் ரசிகர்களுடன் போட்டிகள் நடைபெறும் என சர்வதேச சம்மேளனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஃபிபா தலைவர் கியானி இன்பேன்டினோ தெரிவித்ததாவது, கத்தாரில் அடுத்தாண்டு நடைபெறும் உலக கோப்பை கால்பந்தாட்டத்தின் போது ஸ்டேடியம் முழுவதும் ரசிகர்களை காண உள்ளோம். பலரது எதிர்பார்ப்பும் இதுவாகத்தான் உள்ளது. கோவிட் பரவல் தோற்கடிக்கப்பட வேண்டும். அதனுடன் வாழ்வது எப்படி என்பது குறித்தும் அறிந்துகொண்டுள்ளோம். உலக கோப்பை போட்டிக்கு இன்னும் இரண்டு ஆண்டு காலம் உள்ளது. அதற்குள் கொரோனாவை விரட்டியடிக்க வேண்டும் என குறிப்பிட்டார்.

கொரோனா தடுப்பு மருந்து தொடர்பாக உலக சுகாதர அமைப்புடன் ஃபிபா தலைவர் கியானி இன்பேன்டினோ, ஜெனிவாவில் இருந்து காணொலி வாயிலாக கலந்துரையாடினார். அப்போது கத்தார் உலக கோப்பை கால்பந்தாட்டத்தில் ரசிகர்கள் அனுமதிக்கப்பட உள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். 32 நாட்கள் பங்கேற்கும் உலக கோப்பை கால்பந்தாட்டம் கத்தாரில் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்குகிறது. இதற்கான தகுதி போட்டிகள் ரசிகர்கள் இன்றி ஆசியா மற்றும் தென் ஆப்ரிக்காவில் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகின்றன.

Related Stories: