திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: கலெக்டர் துவக்கி வைத்தார்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் 5 வயதிற்குட்பட்ட 2 லட்சத்து 52 ஆயிரத்து 72 குழந்தைகளுக்கு 1448 சிறப்பு முகாம்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நேற்று நடைபெற்றது. அதன்படி திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமில் கலெக்டர் பொன்னையா கலந்துகொண்டு முகாமை துவக்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில், இணை இயக்குநர் ராணி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் ஜவஹர்லால், நகராட்சி ஆணையர் சந்தானம், திருவள்ளூர் ரோட்டரி சங்க தலைவர் சந்துரு, செயலாளர் பாலாஜி, பொருளாளர் மோகன் குமார், சங்கப்பணி இயக்குனர் இளைய மாறன், போலியோ பிளஸ் சேர்மன் ராஜேந்திரன், இயக்குனர் திராவிடமணி மற்றும் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இந்த முகாமில் மாவட்டம் முழுதும் பணிபுரிந்த அனைத்து அரசு ஊழியர்களுக்கும் திருவள்ளூர் ரோட்டரி சங்கம் சார்பாக காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி வட்டார மருத்துவர் கோவிந்தராஜ் மேற்பார்வையில் கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம், ஆரம்பாக்கம் பேருந்து நிலையம், கவரப்பேட்டை பேருந்து நிலையம், மாதர்பாக்கம் பேருந்து நிலையம், சுண்ணாம்புகுளம் பேருந்து நிலையம் மற்றும் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம், எளாவூர் ரயில் நிலையம், ஆரம்பாக்கம் ரயில் நிலையம் உள்ளிட்ட 130 மையங்களில் 20,033 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து நேற்று வழங்கப்பட்டது.

Related Stories: