ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆள்மாறாட்டம் வாலிபர் கைது

திருவள்ளூர்: ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் நேற்று பெரியபாளையம் போலீஸ் நிலைய வழக்கின் எதிரியான செல்வராஜ் மகன் முருகன் என்பவருக்கு ஆஜரான நபரிடம், பெயர் மற்றும் வழக்கு குறித்து விபரங்களை விசாரணை நடத்தியபோது, முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதில் சந்தேகம் அடைந்த ஜே.எம்.நீதிமன்ற பெஞ்ச் கிளார்க் உமா மகேஸ்வரி, கோர்ட் காவலர் உதவியுடன் நீதிமன்றத்தில் வைத்து விசாரித்தபோது, அவர் அரக்கோணம் பழனிப்பேட்டை ரங்கநாதன் மகன் மணிகண்டன்(36) என்பதும், வழக்குக்குரிய நபர் இல்லை என்பதும், ஆள்மாறாட்டம்  செய்ததும் தெரிந்தது. இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீசார் வழக்குபதிந்து, ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட மணிகண்டனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: