தை பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி கோயிலில் பக்தர்கள் தரிசனம்

வத்திராயிருப்பு: தை பவுர்ணமியான நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். போதிய பாதுகாப்பு வசதியோ, மருத்துவ வசதியோ செய்து தரவில்ைலயென்று அவர்கள் புகார் கூறினர். மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயில் உள்ளது. ஜன. 26 முதல் இன்று வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று தைப்பூசம் மற்றும் தை பவுர்ணமியை முன்னிட்டு அதிகாலை 4 மணி முதலே சென்னை, சேலம், கோவை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை கேட் பகுதியில் குவிந்தனர்.

காலை 7 மணிக்கு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் உடமைகளை சோதனை செய்த பின்பு வனத்துறையினர் அனுமதித்தனர். இரவில் சுந்தரமகாலிங்கத்திற்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகம் நடைபெற்றது. இதன் பின் சுந்தரமகாலிங்கம் பக்தர்களுக்கு காட்சியளித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுந்தரமகாலிங்கம் கோயில் பரம்பரை அறங்காவலர் ராஜா (எ) பெரியசாமி, செயல் அலுவலர் விஸ்வநாத் செய்திருந்தனர்.

பக்தர்கள் கூறுகையில், ‘‘தாணிப்பாறை அடிவாரத்தில் இருந்து கோயில் வரை மலைப்பகுதியில் போதிய பாதுகாப்பு வசதிகளை போலீஸ் செய்யவில்லை. சில பக்தர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. முதலுதவி செய்யக்கூட டாக்டர்கள் இல்லை’’ என்றனர்.

Related Stories: