கொரோனா தொற்று விதிமுறைகளுக்குட்பட்டு நாளை முதல் கம்பளா போட்டிகள்

மங்களூரு: துலுநாட்டின் பாரம்பரிய விளையாட்டான கம்பளா, கொரோனா தொற்று விதிமுறைகளுக்குட்பட்டு நாளை நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர் கேவி ராஜேந்திரா  கூறுகையில், ``கம்பாளா விளையாட்டின் போது அதிக மக்கள் கூடக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரவு 10 மணிக்குள் போட்டியை முடித்துக்கொள்ள வேண்டும் என்றும் பார்வையாளர்கள் முககவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என கம்பாளா சமிதி அமைப்பினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

தொடர்ந்து இதுகுறித்து நடைபெற்ற கூட்டத்தில் கலந்துக்கொண்ட பின்னர் மாவட்ட எம்பி நளின்குமார் கட்டீல் கூறியதாவது: ``பாரம்பரிய விளையாட்டுகள் வழக்கமாக அறுவடைகாலமான நவம்பர் டிசம்பர் முதல் மார்ச் மாதத்திற்குள் நடத்தி முடிக்கப்படும். கொரோனா தொற்று பரவல் காரணமாக கம்பாளா போட்டியை நடத்த சிறிது காலதாமதமானது. நாளை பாதுகாப்புடன் போட்டியை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காட்டாயம் விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 100 வருடங்களுக்கு முன்பு இப்பகுதியை ஆட்சி செய்த மன்னர்களால் இந்த விளையாட்டு ஆரம்பிக்கப்பட்டது’’ என தெரிவித்தார்.

Related Stories: