தொடர்ந்து பெய்த மழை நின்றும் வயலில் தண்ணீர் வடியாததால் இயற்கை விவசாயம் பாதிப்பு-விவசாயிகள் கவலை

சேதுபாவாசத்திரம் : சேதுபாவாசத்திரம் கடைமடையில் தொடர்ந்து பெய்த மழை நின்றும் இதுநாள்வரை தண்ணீர் வடியாததால் இயற்கை விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.சேதுபாவாசத்திரம் கடைமடையில் பெய்த பேய்மழையில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 10 ஆயிரம் ஏக்கர் சம்பா சாகுபடி நீரில் மூழ்கி முளைத்து சேதமடைந்தது. குறிப்பாக பள்ளத்தூர் பகுதியில் மட்டும் சுமார் 3000 ஏக்கர் சாகுபடி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பள்ளத்தூர் சத்தியமூர்த்தி என்பவர் 4 ஏக்கர் நிலத்தில் மாப்பிள்ளை சம்பா, கிச்சளி சம்பா போன்ற நெல் ரகங்களை இயற்கை விவசாயம் செய்திருந்தார். அவை அறுவடை கதிராகவும், சூழ்பிடிக்கும் பருவத்திலும் இருந்தது. அவை அனைத்தும் தொடர்ந்து பெய்த மழையால், நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. மழைவிட்டு 7 நாட்களாகியும், இதுநாள் வரை தண்ணீர் வடியவில்லை. இதனால் என்ன செய்வது என தெரியாமல் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

Related Stories: