சமூக வலைத்தளங்களில் தணிக்கை செய்யப்பட்ட வீடியோவை வெளியிட உத்தரவிடக் கோரி வழக்கு: பேஸ்புக், யூடியூப், கூகுள் நிறுவனம் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: முகநூல், யூ-டியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் தணிக்கை செய்யப்பட வீடியோக்களை வெளியிட உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. அந்த வழக்கில் அந்தந்த நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நெல்லையை சேர்ந்த உமா மகேஸ்வரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த பொதுநல வழக்கு என்பது சென்னையில் கடந்த மாதம் சென்னையை சேர்ந்த ஒரு யூ-டியூப் சேனல் பெண்களிடம் ஒரு தவறான வார்த்தைகளை பயன்படுத்தி ஒரு சர்வே எடுத்திருந்தது. அதன் அடிப்படையில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

அது மிகவும் அவதூறாக இருப்பதாக கூறி அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தனர். அதன் அடிப்படையில் தற்போது 3 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக அந்த யூ-டியூப் சேனல் முடக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் அந்த யூ-டியூப் சேனலில் வெளியிடப்பட்ட செய்தி பல்வேறு தரப்பினரிடையே பதிவிறக்கம் செய்யப்பட்டு தற்போது சமூக வலைத்தளங்களில் பரவப்பட்டு வருகிறது. குறிப்பாக யூ-டியூப் மற்றும் பேஸ்புக் மூலமாக வெளியிடக்கூடிய பல்வேறு வீடியோக்கள் எந்தவிதமான தடையும் இன்றி குறிப்பாக சினிமாவில் வரக்கூடிய சென்சார் என்பது இல்லாமல் முழுமையாக விடப்படுகிறது.

இதனால் பெண்களுக்கான பாலியல் குற்றச்சாட்டுகள் அதிகரிக்கின்றன. எனவே இதனை கட்டுப்படுத்த வேண்டும். குறிப்பாக 2012-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி பெண்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதில் இந்தியா 3-ம் இடத்தை பிடித்துள்ளது. எனவே இது போன்ற வீடியோக்கள் அனைத்தையுமே தணிக்கை செய்ய வேண்டும். குறிப்பாக அங்கீகரிக்கப்பட்ட சேனல், அதாவது செய்தி சேனல்களை தவிர மற்ற எந்த முகநூல், யூ-டியூப் சேனல்களும் நேரடி ஒளிபரப்பு செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார் இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது கூகுள் நிறுவனம் சார்பாக முகநூல், யூ-டியூப் போன்ற நிறுவங்கள் இது சம்மந்தமாக பதிலளிக்க உத்தரவிட வேண்டும். மேலும் மத்திய அரசு இது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்பது குறித்தும் தெளிவுப்படுத்த வேண்டும் என்பதற்காக அவர்கள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Stories: