சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது

பெங்களூரு: சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகாவை சேர்ந்தவர் தேவராஜ். இவர் பெங்களூரு எலக்ட்ரானிக்சிட்டி பகுதியில் தங்கி வேலை செய்து வருகிறார்.  இதே போல் கொள்ளேகாலை சேர்ந்த பெண் ஒருவரும் இதே பகுதியில் தங்கி வேலை செய்து வந்தார். தாயை பார்க்க சிறுமி அடிக்கடி பெங்களூருவிற்கு வந்து சென்றார். அப்போது இவர்கள் இடையே பழக்கம் ஏற்பட்டது.

இந்நிலையில் ஜனவரி 14-ம் தேதி கொள்ளேகால் வந்த தேவராஜ் தந்தையுடன் வசித்து வந்த சிறுமியை பைக்கில் கடத்தி சென்றார். சிறுமி மாயமான விஷயம் அறிந்த தந்தை ஜனவரி 18-ம் தேதி ஊரக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

 வழக்கு பதிவு செய்த போலீசார் தேவராஜின் செல்போன் டவரை வைத்து அவர் மறைந்துள்ள இடத்தை கண்டறிந்து அங்கு சென்று அவரை கைது செய்தனர். பின்னர் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது. இதனால் வாலிபரை கைது செய்து போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி பின் சிறையில் அடைத்தனர். அதே போல் சிறுமியை பெண்கள் காப்பகத்தில் சேர்த்தனர்.

Related Stories:

>