ஷிவமொக்கா வெடி விபத்து விசாரணை நடத்த 5 குழுக்கள் அமைப்பு: கிழக்கு மண்டல ஐஜிபி எஸ் ரவி தகவல்

பெங்களூரு: ஷிவமொக்கா வெடி விபத்து குறித்து விசாரணை நடத்த சி.பி.ஐ. தலைமையில் 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று கிழக்கு மண்டல ஐ.ஜி.பி. எஸ்.ரவி தெரிவித்தார். ஷிவமொக்காவில் உள்ள கல்குவாரியில் கடந்த வாரம் வெடிப்பொருட்கள் இருந்த லாரி வெடித்து சிதறியது. இதில், 7 பேர் உடல் சிதறி பலியாகினர். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்று முதல்வர் எடியூரப்பா, உள்துறை அமைச்சர் பசவராஜ்பொம்மை உட்பட அமைச்சர்கள், காவல்துறையினர் அறிவித்தனர். இந்தநிலையில், ஷிவமொக்கா வெடிவிபத்து தொடர்பாக விசாரணை நடத்த 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று கிழக்கு மண்டல ஐஜிபி எஸ். ரவி தெரிவித்தார். ஷிவமொக்காவில் இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ``ஷிவமொக்கா மாவட்டம் ஹூனசோடு கிராமத்தில் கல்குவாரிக்கு எடுத்து சென்ற வெடி மருந்து பொருட்கள் வெடித்து 7 பேர் உயிரிழந்துள்ளனர்.  

இது குறித்து விசாரணை நடத்த சி.பி.ஐ. தலைமையில் 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் பாரபட்சமின்றி விசாரணை நடத்தி அறிக்கை வழங்குவார்கள் என்ற நம்பிக்கையுள்ளது. மேலும், வெடி விபத்து தொடர்பாக இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்த 7 பேரில் மூன்று பேர் பத்ராவதியை சேர்ந்தவர்கள், மூன்று பேர் ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தை சேர்ந்தவர்கள் ஒருவரின் அடையாளம் மட்டும் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இதை கண்டுபிடிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெடி விபத்து நடைபெற்ற இடத்தை சுற்றி பல்வேறு பகுதிகளில் ஜெலட்டின் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது’’ என்றார்.

வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்த 7 பேரில் மூன்று பேர் பத்ராவதியை சேர்ந்தவர்கள், மூன்று பேர் ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தை சேர்ந்தவர்கள் ஒருவரின் அடையாளம் மட்டும் இன்னும் உறுதிப்படுத்தவில்லை

Related Stories: