செட்டிப்பாளையம் தடுப்பணை அருகே புதர் மண்டிக்கிடந்த பூங்கா சீரமைப்பு: எஸ்பி அதிரடி நடவடிக்கை

கரூர்: கரூர் மாவட்டம் செட்டிப்பாளையம் அருகேயுள்ள பூங்கா சீரமைக்கப்படுமா? என தினகரன் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதையடுத்து, மாவட்ட எஸ்பி உத்தரவின்பேரில், போலீசார் பொதுமக்களுடன் இணைந்து பூங்காவை சீரமைக்கும் பணியை நேற்று மேற்கொண்டனர்.கடந்த 21ம்தேதி தினகரன் நாளிதழில், கரூர் மாவட்டம் செட்டிப்பாளையம் தடுப்பணை அருகேயுள்ள பூங்கா செடி, கொடிகள் படர்ந்து, விளையாட்டு உபகரணங்கள் பழுதடைந்த மோசமான நிலையில் உள்ளது. இதனை சீரமைக்க வேண்டும் என படத்துடன் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.இந்நிலையில், இது குறித்து நேற்று முன்தினம் பூங்கா பகுதிக்கு மாவட்ட எஸ்பி பகலவன் சென்று பார்வையிட்டார்.

இதனைத் தொடர்ந்து நேற்று காலை எஸ்பி உத்தரவின்பேரில், கரூர் டிஎஸ்பி முகேஸ் ஜெயக்குமார் தலைமையில் ஏராளமான போலீசார்கள், இந்த பகுதி மக்களுடன் இணைந்து பூங்கா வளாகம் முழுதும் சீரமைப்பு பணியை மேற்கொண்டனர். மேலும், எஸ்பி பகலவன் நேற்று சம்பவ இடத்துக்கு சென்று புதிய மரக்கன்றுகளையும் நட்டு, பணிகளை சிறப்பாக மேற்கொள்ள உத்தரவிட்டார்.இதனைத் தொடர்ந்து, பூங்கா பராமரிப்பினைத் தொடர்ந்து, மேலும், கரூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு பூங்காக்களை சீரமைக்கும் பணியை மேற்கொள்ளவுள்ளதாகவும், பூங்கா பகுதியில் பொதுமக்கள் பாதுகாப்புடன் வந்து செல்லும் வகையில் சிசிடிவி கேமராக்களும் பொருத்தும் பணி மேற்கொள்ளப் படுவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.போலீசார் நேற்று மேற்கொண்ட இந்த பணி காரணமாக இந்த பகுதியினர் மகிழ்ச்சியடைந்து போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர்.

Related Stories: