கரூர் : கரூர் தெற்கு காந்திகிராமம் பகுதியில் வடிகால் வசதி அமைத்து தர வேண்டும் என இந்த பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர். கரூர் நகராட்சிக்குட்பட்ட காந்திகிராமம் பகுதியில் வடக்கு மற்றும் தெற்கு காந்திகிராமம் என இரண்டு பகுதிகள் உள்ளன.தெற்கு காந்திகிராமம் பகுதியை சுற்றிலும் குடியிருப்போர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால், குடியிருப்புகளின் நிலைக்கு ஏற்ப, இந்த பகுதியில் போதியளவு சாக்கடை வடிகால் வசதி இல்லை.