மெட்ரோ ரயிலில் பயணம் செய்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு

பெங்களூரு: கொரோனா தொற்று பரவல் காரணமாக 5 மாதங்கள் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டிருந்து. கடந்த செப்டம்பர் மாதம் முதல் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. பயணிகள் கொஞ்சம் கொஞ்சமாக பயணம் செய்ய தொடங்கினர். ஆன்லைன் மூலம் ஸ்மார்ட் கார்டில் ரீசார்ஜ் செய்யும்  வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக பயணிகள் வருகை வழக்கமாக இருந்தது. கடந்த டிசம்பர் மாதம் நாள் ஒன்றுக்கு 70 முதல்  80 ஆயிரம் பேர் வரை பயணம் செய்தனர்.

புத்தாண்டு தொடங்கிய பின் பயணிகள் எண்ணிக்கை ேமலும் அதிகரித்தது. கடந்த 1ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதால், பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரித்து தற்போது நாள்தோறும் 1.25 லட்சம் பேர் பயணம் செய்து வருவதாக மெட்ேரா ரயில் கார்ப்பரேஷன்  நிர்வாக செயலதிகாரி ஏ.எஸ்.சங்கர் தெரிவித்தார். பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தாலும் கவுன்டர்களில் டிக்கெட் கொடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. நம்ம மெட்ரோ ஆப் அல்லது பேடிம் மூலம் ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும் என்றார்.

Related Stories: