நடத்தையில் சந்தேகம் மனைவியை கொன்று கணவன் தற்கொலை

காஜியாபாத்: காஜியாபாத்தின் நிவாரி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பாட்லா நகரில் வசித்து வந்த மனோஜ், கோமளா தம்பதியிடையே மாதக்கணக்கில் குடும்ப சச்சரவு நீடித்து வந்துள்ளது. இந்நிலையில், நகருக்கு வெளியேயுள்ள வயலில் பெண் சடலத்தை போலீசார் புதன்கிழமை மீட்டனர். நீலம் பூத்த உடல் முழுவதும் ஆங்காங்கே தடிப்புகள் இருந்ததை கண்ட போலீசார், தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், இறந்தவர் கோமளா என்றும், வெறித்தனமான தாக்குதலில் உயிரிழந்துள்ளார் எனவும் கண்டு பிடித்தனர்.

அதையடுத்து அவரது இருப்பிடத்தை கண்டறிந்து அங்கு சென்றதில், கோமலாவின் கணவர் மனோஜும் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதை பார்த்து, சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சகோதரி இறந்த தகவல் அறிந்து அதிர்ச்சியும், சோகமும் அடைந்த கோமளாவின் சகோதரர் ஹரீஷ் பின்னர் போலீசில் கூறுகையில், ‘‘சகோதரியின் நடத்தையில் மனோஜுக்கு பலத்த சந்தேகம் இருந்தது. அடித்து, உதைத்து டார்ச்சர் செய்கிறார் என சகோதரி பலமுறை என்னிடம் கூறியுள்ளார்.

உடல் நலம் சரியில்லாததால் டாக்டரை பார்க்க கணவருடன் செல்கிறேன். அதன் பிறகு பிணமாகத்தான் சகோதரியை பார்க்கிறேன்’’, என அழுது புலம்பினார். போலீஸ் விசாரணையில், டாக்டரை பார்த்துவிட்டுத் திரும்பியபோது, வயல்வெளியில் வைத்து கோமளாவை தாறுமாறாக அடித்து மனோஜ் கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. சம்பவத்தை உறுதி செய்யும் ஆதாரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

Related Stories:

>