ஆப்கானில் தாக்குதல் 2 பெண் நீதிபதி சுட்டுக் கொலை: தலிபான்கள் கைவரிசை

காபூல்: ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள தனது நாட்டு ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை 2 ஆயிரமாக குறைக்கவும், மற்றவர்களை திரும்ப அழைத்துக் கொள்ளவும் அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதனால், அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் என தலிபான் தீவிரவாத அமைப்பு உறுதி அளித்தது. ஆனாலும், அவை தாக்குதலை தொடர்ந்தததால், ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலிபான்கள் இடையே நடந்து வந்த பேச்சுவார்த்தை தடைபட்டது.

இந்நிலையில், சமீபத்தில் தலிபான்கள் உடனாக பேச்சுவார்த்தையை அரசு தொடங்கி உள்ளது. இந்நிலையில், ஆப்கானில் உயர் நீதிமன்ற பெண் நீதிபதிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. காரில் பயணம் செய்த நீதிபதிகள் மீது துப்பாக்கி ஏந்திய மர்மநபர்கள் தாக்குதல் நடத்தனார்கள். இந்த துப்பாக்கி சூட்டில் இரண்டு பெண் நீதிபதிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஓட்டுனர் காயமடைந்தார். அவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. இந்த தாக்குதல் சம்பவத்துக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

Related Stories: