தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளின் குறைகளை வாட்ஸ்அப்பில் பதிவேற்ற தடை: பணியாளர்களுக்கு திடீர் எச்சரிக்கை

சேலம்: தமிழக உயர்கல்வித்துறையின் கீழ் 130க்கும் மேற்பட்ட அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளில் பேராசிரியர், அலுவலக பணியாளர்கள் மற்றும் இதர பணியாளர்கள் என ஆயிரக்கணக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன. மேலும், பல கல்லூரிகள் மற்றும் கல்லூரி கல்வி இயக்கக மண்டல அலுவலகங்களில், எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாத நிலை காணப்படுகிறது. இதுதொடர்பாக  சம்பந்தப்பட்ட பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பலமுறை புகாராக, கோரிக்கையாக தெரிவித்தும் கண்டுகொள்ளப்படவில்ைல. இதுபற்றி அவர்கள் வாட்ஸ்அப் குழுக்களில் அந்த குறைபாடுகளை பதிவேற்றம் செய்து, தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வந்தனர். இதனால் உயர்கல்வித்துறைக்கு சிக்கல் ஏற்பட்டது.

இதனிடையே, இதுபோன்று குறைபாடுகளை தெரிவிக்க கூடாது என திடீரென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் ராமலட்சுமி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு கல்லூரிகள், மண்டல அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்கள், தங்களது குறைபாடுகள் மற்றும் அவர்கள் பணிபுரியும் கல்லூரி வளாகம் மற்றும் அலுவலகத்தில் உள்ள குறைபாடுகளை, வாட்ஸ்அப் குரூப்பில் பதிவேற்றம் செய்யக்கூடாது. இந்த குறைபாடுகள் தொடர்பாக, சம்பந்தப்பட்ட மேலதிகாரிகளிடம் முறையிடுமாறு தெரிவிக்கப்படுகிறது. இதனை பணியாளர்கள் அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அவ்வாறு கடைபிடிக்காதவர்கள் மீது, சைபர் கிரைம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

Related Stories: