நீர் திறப்பு 8 ஆயிரம் கனஅடியாக குறைப்பு: தாமிரபரணியில் வெள்ளம் தணிகிறது

நெல்லை: மழை குறைந்து வருவதால் அணைகளில் நீர் திறப்பு நேற்று காலை 8 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் தாமிரபரணியில் பெருவெள்ளம் தணிகிறது. வடகிழக்கு பருவமழை நீடித்து வரும் நிலையில் ெதன்மாவட்டங்களில் எதிர்பாராதவிதமாக ஜனவரியில் கனமழை வெளுத்துக் கட்டியது. இதனால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் நிரம்பி உபரிநீர்   சுமார் 80 ஆயிரம் கன அடி அளவுக்கு தாமிரபரணியில் பாய்ந்து பெருவெள்ளம் ஏற்பட்டது.  இந்நிலையில் நேற்று முன்தினம் நெல்லை மாவட்டத்தில் மழையளவு சற்று குறைந்தது.  இதன் காரணமாக அணைகளில் இருந்து தாமிரபரணி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவும் படிப்படியாக குறைக்கப்பட்டது. நேற்று முன்தினம் மாலை 15 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில் நேற்று காலை விநாடிக்கு 8,387 கனஅடியாக குறைக்கப்பட்டது. நேற்று பகல் முழுவதும் வெயில் தலை காட்டிய போதிலும், பிற்பகலில் ஒரு மணி நேரம் நல்ல மழை பெய்தது. நீர் திறப்பு குறைக்கப்பட்டதால் பெருவெள்ளம் மெல்ல தணிந்து வருகிறது.

Related Stories: