புதுச்சேரி- பெங்களூர் நெடுஞ்சாலையில் பள்ளத்தால் விபத்து ஏற்படும் அபாயம்

கண்டாச்சிபுரம்: புதுச்சேரி-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கெடார் அடுத்த மங்களபுரம் பகுதியில் சாலையின் நடுவில் கடந்த வாரம் பெய்த கனமழையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இது முக்கியமான சாலை என்பதால் 24 மணி நேரமும் இருசக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள், பேருந்துகள், கார்கள் போன்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் தினமும் இந்த நெடுஞ்சாலையை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக விழுப்புரம்- திருவண்ணாமலை செல்லும் வாகனங்கள் இந்த நெடுஞ்சாலையை முழுமையாக பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது பொங்கல் பண்டிகையை யொட்டி அதிக அளவில் இந்த சாலையை வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த வாரம் கெடார் பகுதியில் பெய்த கனமழை காரணமாக மங்களபுரம் பகுதியில் சாலையின் நடுவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த நெடுஞ்சாலையில் இரவும் பகலும் அதிக எண்ணிக்கையிலான வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருவதால் சிறிது கவனகுறைவு ஏற்பட்டாலும் பெருமளவில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சாலையின் நடுவில் உள்ள பள்ளத்தை சரி செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: