விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் இணையத்தில் வெளியானதால் பரபரப்பு

சென்னை: விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மாஸ்டர், பொங்கல் பண்டிகையொட்டி இப்படம் நாளை திரைக்கு வருகிறது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாக உள்ள நிலையில், முழு திரைப்படமும் நேற்று இரவு  இணையதளத்தில் வெளியானது. இது குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ்  வெளியிட்ட டிவிட்டரில், ``மாஸ்டரை உங்களிடம் எடுத்துவர ஒன்றரை வருடங்கள் உழைத்திருக்கிறோம். இவை அனைத்து நீங்கள் திரையரங்குகளில் கொண்டாடுவீர்கள் என்ற நம்பிக்கையில்தான். கசிந்த காட்சிகளை தயவுசெய்து பகிராதீர்கள். அனைவருக்கும் நன்றி. ஒரு நாள்தான், அதன் பின் மாஸ்டர் உங்கள் சொத்து’’, என்று கூறியுள்ளார்.

Related Stories: