நீட் போலி சான்றிதழ் விவகாரம்: பல் மருத்துவரை பரமக்குடி அழைத்து வந்து விசாரணை'மாணவி படித்த பள்ளியிலும் விசாரித்தனர்

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நேரு நகரை சேர்ந்தவர் பாலச்சந்திரன். பல் டாக்டர். இவரது மகள் தீக்ஷா. இவர் நீட் தேர்வில் குறைவான மதிப்பெண்ணே பெற்றார். எனவே பரமக்குடியில் பிரவுசிங் சென்டர் நடத்தும் ஒருவரின் உதவியுடன், நீட் தேர்வில் 610 மதிப்பெண் பெற்ற மற்றொரு மாணவியின் சான்றிதழை, தனது மகள் சான்றிதழ்போல் பாலச்சந்திரன் தயாரித்து, மருத்துவ கவுன்சலிங்கில் பங்கேற்றார். இதை கண்டுபிடித்த அதிகாரிகள் புகாரின்படி சென்னை பெரியமேடு போலீசார் வழக்குப்பதிந்து தலைமறைவான தந்தை, மகளை தேடி வந்தனர். இதில் பாலச்சந்திரன் கைது செய்யப்பட்டார். மாணவியை தேடி வருகின்றனர். சென்னை போலீசார் டாக்டர் பாலச்சந்திரனை நேற்று முன்தினம் இரவு பரமக்குடிக்கு அழைத்து வந்தனர். அங்குள்ள ஒரு தனியார் ஓட்டலில் வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரது வீடு, அவரது பல் மருத்துவமனை, மாணவி தீக்ஷா படித்த பள்ளி ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். மேலும் போலி சான்றிதழ் தயாரிக்க உதவிய கம்ப்யூட்டர் சென்டர் குறித்தும் விசாரணை நடத்தினர்.

Related Stories: