அம்மாபேட்டையில் மழையால் சம்பா நெற்பயிர் சேதம்: வயலில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அறுவடைக்கு தயாராக உள்ள சம்பா வயல்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் பயிர்கள் சாய்ந்து சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தஞ்சை அருகே அம்மாபேட்டை ஒன்றியத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்கதிர்கள் தற்போது பெய்து வரும் தொடர் மழையால் நீரில் மூழ்கி, அழுகி முளைத்துள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட இதுவரை அரசு அதிகாரிகள் யாரும் வரவில்லை.

இதை கண்டித்தும், தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் பாதிப்புக்குள்ளான விவசாய நிலங்களை பார்வையிட்டு, உரிய கணக்கீடு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி அம்மாபேட்டை புத்தூரில் இனஙறு நெற்கதிர்கள் சாய்ந்த வயலில் இறங்கி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். இதில் ஒன்றியக் குழு உறுப்பினர் உத்திராபதி, கிளை நிர்வாகிகள் திருநாவுக்கரசு, ராஜேந்திரன் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கலந்துக் கொண்டனர்.

Related Stories: