கொரோனா காலத்தில் தியேட்டர்களில் 50% இருக்கை முடிவு சரியானது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேட்டி

சென்னை: கொரோனா காலத்தில் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கை வசதி மட்டுமே அனுமதித்து இருப்பது வரவேற்க தக்கது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கூறினார். சென்னை விமான நிலையத்தில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தியோட்டர்களில் 50 சதவீதம் இடத்திற்குத் தான் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியமான முடிவு. தொழிலும் நடக்க வேண்டும். அதே நேரத்தில் மக்களின் ஆரோக்கியமும் முக்கியம். எனவே தற்போதைய முடிவு நல்ல முடிவு. அரசு மக்களுக்கு இலவசங்கள் கொடுப்பதில் எதுவும் குற்றம் இல்லை. அது அரசு மக்களுக்கு செய்யும் முதலீடு. தமிழக அரசு மாணவர்களுக்கு இலவச டேட்டா வழங்கியுள்ளது நல்லதுதான், கொடுக்கலாம். இவைகள் எல்லாவற்றிலுமாக தமிழக அரசு வெற்றி நடை போடுவதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஏனென்றால் அரசு வெற்றி நடை போட்டிருந்தால் நானெல்லாம் அரசியலுக்கே வந்திருக்க மாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: