புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிரான போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு: முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிரான போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடியை திரும்ப பெறக்கோரி 3 நாட்களாக ஆளும்கட்சி கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரியில் பாஜக துணையுடன் இரட்டை ஆட்சி முறையை நடத்தி வந்தார் கிரண்பேடி என முதல்வர் நாராயணசாமி குற்றசாட்டு கூறியிருந்தார்.

புதுவை காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் கவர்னர் கிரண்பேடியை கண்டித்து தொடர் தர்ணா போராட்டம் நடந்து வருகிறது. புதுவை மறைமலையடிகள் சாலையில் நேற்று முன்தினம் முதல்- அமைச்சர் நாராயணசாமி தலைமையில் தொடங்கிய தர்ணா போராட்டம் இன்று 3-வது நாளாக நீடித்தது. போராட்டத்தில் அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ் கூட்டணி கட்சி தலைவர்கள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

கூட்டணியில் இடம் பெற்றுள்ள தி.மு.க. போராட்டத்தில் பங்கேற்க வில்லை. இந்த நிலையில் கவர்னர் கிரண்பேடிக்கு எதிரான போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக முதல்- அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். ஜனவரி 22ஆம் தேதி கவர்னர் கிரண்பேடிக்கு எதிரான கையெழுத்து இயக்கம் நடத்தப்படும். பிப்.1ஆம்தேதி உண்ணாவிரதம் நடத்தப்படும் என்றார்.

Related Stories: