வாழைத்தோட்டத்தில் புகுந்து காட்டு யானை அட்டகாசம்

கூடலூர்:  கூடலூரை அடுத்துள்ள பாடந்துறை பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் விவசாயி. இவர் தனது தோட்டத்தில் நேந்திரன் வாழை பயிரிட்டு உள்ளார். நேற்று முன்தினம் இரவு இவரது தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை யானை வாழை மரங்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தியது. இதையறிந்த விவசாயிகள் யானையை விடிய விடிய விரட்ட முயன்றும் முடியவில்லை. இந்நிலையில் நேற்று அதிகாலையில் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது. சுமார் 400க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் காட்டு யானயால் சேதப்படுத்தப்பட்டது.

பாடந்துறை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகளின் தோட்டங்களில் காட்டு யானைகள் தொடர்ந்து உள்ளே புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. யானையை கண்காணித்து விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டாலும், அதனையும் மீறி காட்டு யானைகள் விவசாய நிலத்திற்குள் வருவது வாடிக்கையாக உள்ளது. யானைகளால் சேதப்படுத்தப்படும் பயிர்களுக்கு முறையாக இழப்பீடு வழங்க வனத்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: