இறைவனின் சேவையில் அனைத்து சாதியினரையும் பங்கெடுக்க வைத்தவர் ராமானுஜர் : எழுத்தாளர் இந்திரா சவுந்தர் ராஜன் பேச்சு

கோவை:  கோவை ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் வழங்கும் ‘எப்போ வருவாரோ 2021’ நிகழ்ச்சியின் 8வது நாள் விழா ஆர்.எஸ்.புரம் கிக்கானி மேல்நிலை பள்ளியில் நேற்று நடந்தது. இதில் எழுத்தாளர் இந்திரா சௌந்தர் ராஜன் கலந்து கொண்டு  ஸ்ரீராமானுஜரை   பற்றி பேசுகையில், ‘தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்ந்த ஆன்மீகம் மற்றும் மொழிக்கு சேவை செய்தவர்களை வரலாற்றில் எஞ்சி நிற்கிறார். அப்படி இந்த மண்ணில் எப்படி வாழவேண்டும் என்று நமக்கு வகுத்துத் தந்து சென்றவர். ராமானுஜர் ஸ்ரீபெரம்புத்தூரில் பிறந்தவர் சிறந்த கல்வி பயின்று காஞ்சிபுரத்தில் குருவுக்கு மிஞ்சிய சீடனாக விளங்கியவர்.

32 வயதில் துறவறம் பூண்டவர் 79 வயது வரை திருவரங்கத்தில் வாழ்ந்தார். திருவரங்கத்தில் தற்போதுள்ள கட்டமைப்புகளை உருவாக்கியவர். ராமானுஜர் பிராமணராக இல்லாமல் வைணவத்தை பின்பற்றுபவர் அனைவருமே வைஷ்ணவர் என்று சாதிகளை கடந்து இறைவனின் சேவையில் அனைவரையும் பங்கெடுக்க வைத்தவர்’ என பேசினார்.

Related Stories: