தமிழக கோயில்கள் அரசு நிர்வாகத்தின் பிடியிலுள்ளது.: சத்குரு கருத்துக்கு ஹெச்.ராஜா ஆதரவு

சென்னை: தமிழக கோயில்கள் அரசு நிர்வாகத்தின் பிடியிலுள்ளது என்ற சத்குரு கருத்துக்கு ஹெச்.ராஜா ஆதரவு தெரிவித்துள்ளார். சத்குரு கூறியுள்ள கருத்தை பாஜக தொடர்ந்து கூறி வருகிறது. பாஜக இந்து மாதத்தை சார்ந்த அரசியல் கட்சி என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. பல இந்து போதகர்கள் கருத்துக்களை முன் நிறுத்தியும், இந்து மாதத்தை முன் நிறுத்தியும், இந்தியாவில் பாஜக அரசியல் செய்து வருகிறது. இது பல இடங்களில் வன்முறையில் சென்று முடிந்துள்ளது.

இந்த நிலையில் இந்து கோவில்கள் பற்றி நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் சத்குரு கருத்து ஒன்றை பதிவு செய்து இருந்தார். அந்த பதிவில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டவர்களை டேக் செய்து இருந்தார். அதாவது,  தமிழக கோவில்கள் அரசு நிர்வாகத்தின் பிடியிலுள்ளது. பிரதிஷ்டை செய்யப்பட்ட சக்தி ஸ்தலங்களின் புனிதம் சேதப்படுத்தப்படுகிறது. ஆலயங்கள் பக்தர்களால் நிர்வகிக்கப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது, அதிகாரிகளாலும் அரசியல் சக்திகளாலும் அல்ல“ என்று பதிவிட்டு இருந்தார்.

இந்த கருத்துக்கு பாஜகவை சேர்ந்த ஹெச்.ராஜா ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் தமிழக அரசு இதனை உடனடியாக  செயல்படுத்த வேண்டும் எனவும் ஹெச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: