கோவா: 11 அணிகள் பங்கேற்றுள்ள 7வது இந்தியன் சூப்பர் லீக் தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 49வது லீக் ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால்- எப்சி கோவா அணிகள் மோதின. விறுவிறுப்புடன் நடந்த இந்த போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடிக்க 1-1 என போட்டி சமனில் முடிந்தது. இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 50வது லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் எப்சி- ஒடிசா எப்சி அணிகள் மோதுகின்றன.