ரூ3 கோடிக்கு ஊர்மிளா சொத்து வாங்கிய விவகாரம்; கங்கனா மூலம் பாஜகவின் பாவச்செயல் அம்பலம்: காங்கிரஸ், தேசியவாத காங். நிர்வாகிகள் காட்டம்

மும்பை,: ரூ3 கோடிக்கு ஊர்மிளா சொத்து வாங்கிய விவகாரத்தில், கங்கனாவின் மூலம் பாஜக பாவச்செயல் செய்துள்ளதாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் தொடர்பாக எழுந்த சர்ச்சைகளால் மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா - காங்கிரஸ் - தேசிவாத காங்கிரஸ் கட்சிகளுக்கும், பாலிவுட் நடிகை கங்கனாவுக்கும் இடையே மோதல் போக்கு நீடிக்கிறது. சமீபத்தில் சிவசேனா கட்சியில் சேர்ந்த நடிகை ஊர்மிளா மும்பையின் மத்தாய்கர் பகுதியில் ரூ3 கோடி மதிப்பிலான ஒரு இடத்தை விலைக்கு வாங்கினார். இந்த பணம் தனது பிளாட் விற்பனையிலிருந்து வாங்கியதாக ஊர்மிளா தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த கங்கனா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘அன்பே ஊர்மிளா! எனது கடின உழைப்பின் மூலம் கட்டிய வீட்டை காங்கிரஸ் இடித்தது. நான் பாஜகவுக்கு ஆதாரவாக பேசியதின் மூலம், என் மீது 30 வழக்குகள் மட்டுமே போடப்பட்டுள்ளன. நான் உன்னைப் போல  புத்திசாலியாக இருந்திருந்தால், நானும் காங்கிரசுக்கு ஆதரவாக இருந்திருப்பேன். இப்போது நான் எவ்வளவு முட்டாளாக இருக்கிறேன்?’ என்று தெரிவித்திருந்தார். இதுகுறித்து மகாராஷ்டிராக காங்கிரஸ் பொதுச் ெசயலாளர் சச்சின் சாவந்த் கூறுகையில், ‘பாஜகவுக்கு ஆதரவாக பேசியது, மகாராஷ்டிராவையும், மும்பை காவல் துறையையும் இழிவுபடுத்தியது போன்றவை பாஜகவின் தூண்டுதலின்பேரில் கங்கனா செய்தார்.

இதன் மூலம் பாஜக பெரிய பாவச் செயலை செய்துள்ளது. அக்கட்சி மகாராஷ்டிரா மக்களிடம் மன்னிப்பு கேட்பதன் மூலமே பாஜக தனது பாவங்களை கழுவமுடியும். தற்போது கங்கனா வெளியிட்டுள்ள டுவிட்டில், தான் பாஜகவுக்கு ஆதராக கருத்து கூறியதை ஒப்புக் கொண்டுள்ளார். அதனால், பாஜகவின் தூண்டுதலின் பேரில் கங்கனா செயல்பட்டார் என்பதை நிரூபணம் ஆகியுள்ளது. எந்தவொரு அரசியல் கட்சியும், இவ்வளவு கீழான செயல்களை மகாராஷ்டிராவில் செய்யவில்லை’ என்றார். இதுெதாடர்பாக தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ ரோஹித் பவார் கூறுகையில், ‘கங்கனாவின் டுவிட் மூலம், பாஜகவின் உண்மையான முகம் வெளிப்படையாக தெரியவந்துள்ளது’ என்றார்.

Related Stories: