அமெரிக்க கம்யூட்டர்களில் ஹேக்கர்களால் எதுவும் மாற்ற முடியவில்லை: மைக்ரோசாப்ட் விளக்கம்

வாஷிங்டன்: அமெரிக்க அரசு அமைப்புகளின் தகவலை திருட முயன்ற ரஷ்ய ஹேக்கர்களால் எந்த பாதுகாப்பு அச்சுறுத்தலும் ஏற்படவில்லை, அவர்களால் எந்த சோர்ஸ் கோடையும் மாற்ற முடியவில்லை என மைக்ரோசாப்ட் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அமெரிக்க அரசின் 40க்கும் மேற்பட்ட துறைகளின் பணிகளை மைக்ரோசாப்ட் கவனித்து வருகிறது. இந்நிலையில், கடந்த மார்ச் மாதத்தில் தொடங்கி சில ஹேக்கர்கள் மைக்ரோசாப்ட் தகவல்களை திருட முயற்சித்தது சமீபத்தில் கண்டறியப்பட்டது.

இதன் பின்னணியில் ரஷ்ய ஹேக்கர்கள் இருக்கலாம் என அமெரிக்கா சந்தேகம் எழுப்பியது. ரஷ்ய ஹேக்கர்கள் அமெரிக்க மக்களின் தனிப்பட்ட தகவல்களை திருட முயற்சித்திருக்கலாம் என கூறப்பட்டது. இந்நிலையில், இது குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது விளக்கம் அளித்துள்ளது. அதில், ‘‘ஹேக்கர்கள் சில சோர்ஸ் கோடிங்களை மட்டும் பார்த்துள்ளனர். முழு பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருப்பதால், அவர்களால் எதையும் மாற்ற முடியவில்லை. இந்த ஹேக்கிங்கில் எந்த தனிப்பட்ட தகவலும் திருடப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை. எந்த பாதுகாப்பு அச்சுறுத்தலும் ஏற்படவில்லை’’ என தெரிவித்துள்ளது.

Related Stories: